Tuesday, November 8, 2011

லஞ்சத்தை ஊக்குவிக்கும் அப்துல் கலாம்!

எதிர்பார்த்தது போலவே எல்லாம் நடக்கிறது!

A.B.J. அப்துல் கலாமுக்கு மக்களிடன் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, கூடங்குளம் பிரச்சினையின் தீவிரத்தைக் குலைக்க அரசு செய்யும் முயற்சி பெருவெற்றி பெற்றுள்ளதுபோல் தோன்றுகிறது. அரசு சொல்லி தான் வரவில்லை என்று கலாம் மறுப்பு தெரிவித்துள்ளபோதும், இந்த பிரச்சினையில் தானாகவே தலையிட்டு, கருத்து சொன்னது மட்டுமில்லாமல் 36 பக்க அறிக்கையையும் கொடுத்திருக்கும் திரு. கலாம் அவர்கள், தமிழக மீனவர் பிரச்சினைக்காக இப்படி ஒரு அறிக்கை எங்காவது கொடுத்திருக்கிறாரா? என்று தெரிந்தவர்கள் விளக்கவும்.

தன் வாழ்நாள் முழுவதும் அரசு விஞ்ஞானியாக இருந்தவரும், 1998-ம் ஆண்டு அணுகுண்டு சோதனைக்கு முக்கியக் காரணியாகவும், அக்னி போன்ற ஏவுகணைகளுக்கான சோதனையில் பெரும்பகுதியையும் செலவிட்ட, இந்தியக் குழந்தைகளின் ஏகபோக ஆதரவு பெற்ற திரு அப்துல் கலாம் அவர்கள், 'தான் ஆடாவிட்டாலும், தன் சதையாடும்' என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

அணுஉலை ஆதரவாளர்களுக்கு இது நல்ல தருணம். அப்துல் கலாமின் அறிக்கையை அவுலாகப் போட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு ஊடகங்கள் மென்று கொண்டிருக்கும்.

'கூடங்குளம் அணுஉலையால் எந்த ஆபத்தும் வராது' என்று அவர் கூறியதில் நமக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஆனால், கூடவே அறிக்கை என்ற பெயரில் 10 (11?)அம்சத் திட்டம் ஒன்றை அவர் முன்வைத்திருக்கிறார். அந்த திட்டங்களின் மதிப்பு 200 கோடி(?!)

இந்த அறிக்கை சார்ந்துதான் நமது கேள்விகள் எல்லாம். 

அப்துல் கலாம் அவர்களே,

*அணுஉலை பாதுகாப்பானதா இல்லையா என்பது பற்றிதானே கருத்துகூற வந்தீர்கள்? ஒரு விஞ்ஞானியாக, பாதுகாப்பு குறித்தான கருத்து மட்டும் சொல்லிவிட்டுப்போகாமல், 10-அம்சத் திட்டம் என்பதை எதற்காகத் தயாரித்து வழங்கினீர்கள்?

*நீங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களில்,  அரசாங்கம் மக்களுக்குச் செய்து தந்திருக்க வேண்டிய அடிப்படை விசயங்களும் அடங்கியுள்ளன. இத்தனை நாட்கள் அதைச் செய்துதராதது எதனால்?


*அப்படியானால் அடிப்படை உரிமைகளே, அணுஉலை போன்ற பேரழிவு திட்டங்களை எதிர்த்தால்தான் கிடைக்குமா இந்நாட்டில்?


*14,000 கோடி மதிப்பிடப்பட்டுள்ள அணுஉலை திட்டத்திற்கு,  மக்களுக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணமாக நீங்கள் கருதுவதுதான் ரூ.200கோடி மதிப்புள்ள உங்களது 10 அம்சத் திட்டங்களா?

*குழந்தைகளிடம் 'லஞ்சம் வாங்கும் உங்கள் பெற்றோர்களைக் கண்டியுங்கள்' என்று கூறும் நீங்கள், அணுஉலை எதிர்ப்பு இன்றி இயங்குவதற்கு, அரசாங்கத்தையே லஞ்சம் கொடுக்கத் தூண்டுவது எந்த விதத்தில் நியாயம்?

*'என்ன செய்தாவது ஒரு விசயத்தை நிறைவேற்று' என்பதுதானே லஞ்சத்திற்கு மூலம். உங்களுடைய 10 அம்சத் திட்டமும் இதே விதத்தில்தானே இருக்கிறது?

*********

ஜெர்மனி, மின்உற்பத்தியில் அணுஉலையின் தேவையின்றியே தன்னிறைவு பெற்றுவிட்டதாகச் சொல்லும் நீங்கள், அங்கு நடைமுறையில் உள்ள முறைகளை ஏன் இந்தியாவும் பரிசீலிக்குமாறு பரிந்துரைக்கக்கூடாது? 


ஜெர்மனிக்கு வேண்டாம், இந்தியாவுக்கு மட்டும் அணுஉலை வேண்டுமா?!

அழிவு விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களே, நீங்கள் மக்களிடம் இருந்து வெகுதூரம் விலகிச்சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?
*********

எங்களுக்குத் தேவை, மக்கள் பயந்துவாழும் ஒரு வல்லரசு நாடு அல்ல! அமைதியாக வாழும் நல்லரசே!

5 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
அரவிந்தன் said...

முகம் தெரியாத அனானி பரதேசியே...

SURYAJEEVA said...

தோழர், அனானியின் பின்னூட்டத்தை நீக்கி விடலாம் என்பது என் கருத்து... நீங்கள் கூறியது போல் பலரும் எதிர்பார்த்த கலாம் ஏமாற்றி விட்டார் என்பது பலருக்கும் தெரிந்து விட்டது... அவர் முகமூடி கிழிந்து தொங்குவதை ரசிக்க முடியவில்லை என்றாலும் போராடும் மக்கள் அவர் பேச்சை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது இதமாக இருக்கிறது... இன்குலாப் ஜிந்தாபாத்

kuranku said...

இப்ப நீங்க அப்துல்கலாமை விட அறிவாளி எண்டு சொல்ல வருறீங்களோ? அல்லது nuclear plant இல வேலை பாக்கிற scientist டை பார்த்தா மனிசகுரங்கு மாதிரி தெரியுதா? தெர்மல் பவருக்கு உன் வீட்டு கிணத்தில இருந்தா பெற்றோல் எடுக்கிறது?

nuclear plant வேணும் எண்டும் வேண்டாம் எண்டும் சொல்லுறது உன்னோட தனிபட்ட உரிமை. ஆனா அப்துல்கலாமை பற்றி இஸ்டத்துக்கு காறித்துப்பாதே.உனக்கு அவரிண்ட பெயரை சொல்ல கூட தகுதி இல்லை. நீ எவனிட லஞ்சம் வாங்கிட்டு இதை எழுதினாய் எண்டு நாங்க கேட்டமா?

அருள் said...

அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html