Saturday, October 15, 2011

"புதிய தலைமுறை"யின் அபத்தம்!

'அணுவின்றி' என்று தலைப்பிட்டு இந்தவார 'புதிய தலைமுறை(!)' (20 Oct 2011) தலையங்கம் எழுதியுள்ளது.

அதிலிருந்து சில வரிகள்...

//தமிழகம் மின்பற்றாக்குறையிலிருந்து விடுபட வேண்டுமானால், அதற்கு ஒரே வழி மின்சார உற்பத்தியை அதிகரிப்பதுதான். அதுவும் கணிசமான அளவு பெருக்குவதுதான். தமிழகத்தில் பாயும் நதிகளின் நீர்வரத்து, அண்டை மாநிலங்கள் அனுமதிப்பதைப் பொருத்து இருக்கிறது. காற்று ஆண்டு முழுவதும் கிடைக்காது. சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்வது அதிகச் செலவும் இடமும் பிடிக்கும். இவை எதைக் கொண்டும் கணிசமான அளவு மின்னுற்பத்தி செய்ய இயலாது. நிலக்கரி, பெட்ரோல் விளி மண்டலத்தில் கரிப்படலங்களை ஏற்படுத்தி பருவ நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தச் சூழலில் அணு மின்சாரம்தான் கணிசமான உற்பத்திக்கான வழி...//

//ஓடுகிற ஆறு, ஓசையிடும் கடல், அடுப்பில் எரியும் நெருப்பு, மின்சாரம், போக்குவரத்து, இயந்திரங்கள், ஏன் உண்ணும் உணவில் கூட விபத்துக்கான சாத்தியங்கள், பக்க விளைவுகள் உண்டு. அதற்காக அவையே வேண்டாம் எனச் சொல்லி விடுவோமா? தினம் சாலை விபத்துகளைப் படிக்கிறோம். பயணங்களை நிறுத்தி விட்டோமா? ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன எனத் தெரிந்தும் ஏன் முன்பதிவில் இத்தனை முண்டியடித்தல்?

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு உற்பத்தியில் இறங்குவதுதான் நடைமுறைக்கு ஏற்றது. கூடங்குளப் போராட்டக் குழுவினர் எந்த மாதிரியான பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுப் பெறட்டும். அதை விட்டு பேச்சுவார்த்தையே நடத்தமாட்டோம், வல்லுநர்கள் உட்பட யார் சொன்னாலும் அதற்கு செவி மடுக்கமாட்டோம், அணுமின் நிலையத்தை மூடியே ஆக வேண்டும் எனக் கோருவது நியாயமானதல்ல. //

*******

அணுஉலையின் ஆபத்துகளை அறிந்துகொண்டு விழிப்புணர்வு பெற்று, உலகமே அணுஉலை வேண்டாம் என்கிற நிலைக்குச் சென்று கொண்டிருக்கும்போது,'புதிய தலைமுறை' (இனியொரு விதி செய்வோம்!) என்று பெயரை வைத்துக்கொண்டு, வெற்றிலை மெல்லும் பழையகால பாட்டிபோல ஒரு பக்கத்திற்கு புலம்பி வைத்திருக்கிறது. 

உலகத்தில் பல இடங்களிலும் மாற்று எரிபொருள், இயற்கை எரிபொருள், சூரிய சக்தியைப் பயன்படுத்துதல், உயிரியல் எரிபொருட்கள் என்று ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இக்காலத்தில், அதற்கான உந்துதலை இங்கிருக்கும் மிகப்பெரிய சக்தியான இளைய சமுதாயத்திடம் விதைக்காமல்,  இயற்கை/மாற்று ஆற்றல் ஆராய்ச்சிகளில் இந்திய இளைஞர்களின் பங்கு என்ன? என்று கேள்வி கேட்காமல், இளைஞர்களிடம் அபாயகரமான அணுவின் மீது மோகத்தை விதைக்கிறது 'புதிய தலைமுறை(!)'.

இனி வரும் காலத்தில் இந்திய மக்களுக்குத்தான் அதிய மின்னாற்றல் தேவைப்படும். அதற்காக இந்தியா முழுவதும் அணுஉலைகள் வைத்தாலும் 10% ஆற்றல்தான் அதிலிருந்து பெறமுடியும் என்பது இந்த அணுஉலை வல்லுநர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. கோடிக்கணக்கான மக்களையும் அவர்களின் தலைமுறைகளையும் பணயம் வைப்பது வெறும் 10% ஆற்றலுக்காகவா? என்று கேள்வி எழுப்பாமல் இப்படி எழுதியிருப்பது, 'புதிய தலைமுறையினரை', 'புழுத்த தலைமுறையினராக' மாற்றவா?

9 comments :

suryajeeva said...

ஊடக தர்மம் என்று கூறுவார்கள், சூரிய ஒளி சக்தி ஒரு யூனிட்டுக்கு மூன்று ரூபாய் தான் வருகிறது, இருந்தும் அதை மிகவும் காஸ்ட்லி என்று கூறி வருவது சிரிப்பை தருகிறது

koodal bala said...

இதைவிட பழைய தலைமுறைகள் பரவாயில்லை

வலைஞன் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

Anonymous said...

anga vaala mudaiyaathunaa moodikittu vera edathukku poga vendiyathu thaaney......

நாஞ்சில் பிரதாப்™ said...

இந்த தலையங்கம் எழுதியவரையும், அனானியாக கமண்ட் போட்டவரையும் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட மக்களை கொஞ்சம்பார்த்துவிட்டு வரச்சொல்லவேண்டும்.
தலையங்கம் எழுதியவர் ஒரு அதிமேதாவி என்றுத்தெரிகிறது அல்லது காங்கிரஸ் அடிவருடிஎனத்தெரிகிறது.
சுனாமி என்ற பெயரை கேள்வியேப்படாத நம்மக்களுக்கு அது தெரிந்துவிட்டது. அணுஉலையால் வரும் பாதிப்பும் கூடிய சீக்கிரம் தெரியவரும்...... அப்போது இந்த அதிமேதாவிகள் இருக்கும் இடத்தை சொன்னால் நன்றாக இருக்கும்.

CRC said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி
1.தமிழகம் காற்றாலைகளில் இருந்து பெற்று வரும் மின்சாரம் தமிழகம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 32 சதவீதம். இந்தியாவிலேயே மிக அதிக அளவில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்ய்ம் மாநிலம் தமிழகம். (தேசிய சராசரி9%)இருந்தும் இங்கு மின் பற்றாக்குறை நிலவுகிறது.
2. காற்றாலகளை எல்லா இடங்களிலும் நிறுவ முடியாது. காற்று அதிகம் வீசும் பகுதிகளிலேதான் நிறுவ முடியும்.
3.அதற்கு ஏராளமான நிலப்பரப்புத் தேவை. ஒரு மெகாவாட் உற்பத்தி செய்ய 20முதல் 25 ஏக்கர் தேவை. அப்படியானால் தமிழ்நாட்டின் மின் தேவையை ந்றைவு செய்ய எவ்வளவு நிலம் தேவை, அது நம்மிடம் இருக்கிறதா எனக் கணக்கிட்டுச் சொல்லுங்கள்
4.ஒரு சோலார் பேனல் சராசரியாக 10.6 வாட்ஸ் கொடுக்கும். அப்படியானால் தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய எத்தனை லட்சம் சோலார் பேனல்கள் வேண்டும் அவை எவ்வளவு இடம் பிடிக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
5.சூரிய ஒளி சக்தியின் விலை ஒரு யூனிட்டுக்கு மூன்று ரூபாய் என்று சொல்லும் நண்பரை அதை அவர் எப்படிக் கணக்கிட்டார் என விளக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்கத்தின் இன்றைய பற்றாக்குறை சுமார் 2000 மெகா வாட்கள். கூடங்குளத்திலிருந்து கிடைக்கக் கூடியது 925 மெகாவாட்கள்.
உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்துப் பாருங்கள்
அன்புடன்
மாலன்

Anonymous said...

மின் வெட்டு, மின் வெட்டுனு போரட்டம் பன்னுவாங்கலாம்,அரசாங்கம் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு பன்னுனா அதுக்கும் போரட்டம் பன்னுவான்ங்கலாம். இந்த நாடு எப்பதான் உருப்பட போகுதோ..........


ஏன் அந்த திட்டத‌ ஆரம்பிக்கும் போதே போராட்டம் பன்ன வேண்டியது தானே......


15000 கோடி செலவு செய்து முடிக்கும் போது தான் அந்த அறிவு வந்ததா....

இந்த தேச துரோகிகள ராணுவத்தை கொண்டு கையாளனும்....

இதுக்கு சப்போர்ட் பன்ன நாலு பொரிக்கிங்க........


த்தூ எதுக்குட உங்களுக்கெள்ளாம் இந்த மானங்கெட்ட பொழப்பு.........

ஊர்சுற்றி said...

இங்கு கருத்துகளைப் பதிவு செய்திருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி!

மாலன் அவர்களுக்கு,
தங்களது 3வது கருத்து குறித்தான உங்கள் தகவல் தவறு என்பதை கடந்த 'புதிய தலைமுறை' இதழில் வெளியாகியுள்ள அணுஉலை குறித்தான விவாதத்தின் மூலம் உணர்ந்திருப்பீர்கள். காற்றாலை அமைக்க அத்தனை ஏக்கர்களெல்லாம் தேவைப்படுவதில்லை!

சூரிய சக்திக்கு அதிக இடமும் பணமும் தேவைப்படும்தான்!
ஆனால், நாம் கேட்பதெல்லாம், மின் கடத்தலில் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகள், மாற்று மூலங்களுக்கான உந்துதல்கள் பற்றிய பேச்சையே காணோமே என்பதுதான்.

ஊர்சுற்றி said...

தொலைநோக்குப் பார்வையில் ஆராய்ந்தால் கூட 50 வருடங்களுக்குப் பிறகு எல்லா அணுஉலைகளின் ஆயுளும் முடிவடைந்த பிறகு, கழிவுகளைப் பாதுகாப்பது எப்படி? அதற்குப்பிறகு மின்சாரத்திற்கு என்ன செய்வோம்? மீண்டும் மீண்டும் அணுஉலைகளாகக் கட்டிக்கொண்டே இருப்போமா?! அப்படியானால் எத்தனை கிலோ மீட்டர்களுக்கு ஒரு அணுஉலை வரும்?!