Saturday, September 20, 2008

சைக்கிளுக்கு ஹெல்மெட்டாஆஆஆஆ



இரண்டு வாரத்தி்ற்கு முன்பு என்னை மிதி வண்டியில் தலைக்கவசத்தோடு வேளச்சேரி தாம்பரம் சாலையில் பார்த்திருக்கலாம்!!!

(சும்மா – சைக்கிளுக்கு ஹெல்மெட் போட்டுட்டு போகணும்னு ரொம்ப நாள் ஆசை, அதான்)

இத பார்த்ததும் உங்களுக்கு என்ன தோண வாய்ப்பிருக்குன்னா….!!!!

1) சைக்கிளுக்கு ஹெல்மெட்டா – ஏதாவது பைத்தியமோ?
2) ஏதாவது பெட் கிட் வச்சிருப்பானோ?
3) சென்னை சைக்கோவா இருக்குமோ?
4) ரொம்ப வேகமா போறதா நெனப்போ?
5) ஹெல்மெட் போட சொல்லி விழிப்புணர்வு ஏதுமா?
6) சரியான பயந்தாங்கொள்ளியா(கோழை) இருப்பானோ?


நான் இப்படி போறத பார்த்துட்டு, பைக்ல போறவங்க சிரிச்சிட்டு போனது, office la Security ஒரு மாதிரியா பார்த்தது, ஒரு சின்ன பையன் 'சைக்கிளுக்கு ஹெல்மெட்டா' ன்னு கத்தினது, ரெண்டு பொண்ணுங்க 'ரோட் ஸேப்டி (Road Safety) ரொம்ப முக்கியம், அதுவும் இந்த மோசமான ரோட்ல' அப்படின்னு என்னை கடந்து போகும் போது 'க்ளுக்' னு சிரிச்சிகிட்டே பேசிட்டு போனது, இப்படி பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்துச்சி.

நீங்க கூட முயற்சி பண்ணலாம்..... ;)

10 comments:

யூர்கன் க்ருகியர் said...

ஹெல்மெட் -இன் அவசியத்தை வலியுறுத்தி ஒரு சின்ன பேனரை உங்க சைக்கிளில் கட்டி தொங்க விட்டிருந்தாலாவது கொஞ்சம் புண்ணியமாவது சேர்ந்திருக்கும்.

துளசி கோபால் said...

இங்கே நான் வசிக்கும் நாட்டில் சைக்கிள் ஹெல்மெட் போட்டுக்கலைன்னா சைக்கிளே ஓட்ட முடியாது. உடனே அரெஸ்ட் பண்ணிருவாங்க.

சின்னப் பையன் said...

போலீஸ்கார் யாரும் சைக்கிள் காத்தை இறக்கு விடலியே!!!!!!!

ஊர்சுற்றி said...

அட என்னோட பதிவுக்கு பின்னூட்டமா?

நன்றி ஜுர்கேன் க்ருகேர்.

ஊர்சுற்றி said...

துளசி,

நியூசிலாந்துல இதெல்லாமா நடக்குது.
ஹிஹி....நம்மூர்ல பைக்கையே தலைக்கவசம் இல்லாம ஓட்டிட்டு போனாக்கூட சிலசமயம் நம்ம போலீஸ் கண்டுக்கமாட்டாங்க!!!!

ஊர்சுற்றி said...

சின்னப் பையன் அண்ணே!!!

காத்து புடுங்கி விடுறது வுடுங்க,
என்னிக்கி 'சைக்கிள் ஓட்றதுக்கு லைசென்ஸ் வச்சிருக்கியா?' ன்னு கேக்க போராங்களோன்னு யோசிச்சிட்டு இருக்கேன்!

Kavi said...

இங்கும் (FRANCE) சைக்கிளுக்கு அவசியம் ஹெல்மெட் போடவேண்டும்.
ஆனால் நீங்கள் போட்டிருக்கும் ஹெல்மெட் அல்ல.. சைக்கிளுக்காக வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட்.

ரவி said...

சைக்கிள் ஹெல்மெட் வேற மாதிரி இருக்கும், நீங்க போட்டிருக்கிறது பைக்கோட ஹெல்மெட்...

இருந்தாலும் ஐடியா சூப்பர் !!!!

**** கொஞ்சம் வெய்யில் அதிகமோ இப்ப மெட்ராஸ்ல ? ****

Aruna said...

கொஞ்ச நாளைக்கு முன்னாலே எங்க ஸ்கூலில் road safety பற்றி பேச காவல் துறையினர் வந்திருந்தனர்.அவர்கள் தங்கள் உரையை முடித்தவுடன் Any questions? என்று கேட்டனர்...ஒரு பெண் எழுந்து சைக்கிளில் போக ஏன் ஹெல்மெட் போடக் கட்டாயமில்லை?
அப்படின்னு கேட்டாள்...நாங்க எல்லோரும் சைக்கிளில் ஹெல்மெட் போட்டுட்டுப் போனால் எப்படியிருக்கும்னு நினைச்சு நினைச்சு சிரிச்சோம்....இப்போ பார்த்துட்டேன்...ஹா..ஹா..
அன்புடன் அருணா

ஊர்சுற்றி said...

ஓவியா,செந்தழல் ரவி & Aruna எல்லாருக்கும் என் நன்றி.

எங்க வீட்டு இணைய இணைப்பில இருந்த பிரச்சினையால உங்களுக்கு இவ்வளவு நாளா பதில் போட முடியாம இருந்தது. மன்னிக்கவும்!