Monday, November 16, 2009

2012 (ருத்ரம்) ஒரு பார்வை - பகுதி 1

''உலகமே அழியப் போகுது, உஷாரா இருந்துக்கப்பூ.
மவனே என்ன பண்ணுனாலும் சங்குதான்.
இன்னும் இரண்டே இரண்டு வருஷம்தான், பூமித்தாய் வாயைப் பிளக்கப்போறா, நாம எல்லாரும் உள்ள போகப்போறோம்'' இப்படி உரக்க சொல்வதற்குத் தோதுவாக நல்ல விளம்பரத்தோடும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடும் வெளிவந்துள்ள படம் ('நெட்டுல ரிலீஸ் ஆகிடுச்சா'ன்னு நீங்க கேட்கிறது புரியுது!).

உலகம் அழியப் போகிறதைப் பற்றி பலரும் பலவிதத்தில் பீதியையும் பேதியையும் கிளப்பிவிடும் நேரத்தில், கண்ணுக்குள் இதையெல்லாம் கொண்டுவரும் ஒரு மாயாஜாலம்.

உலகத்தின் அழிவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு(இப்போது, அதாவது 2009) விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். அதிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்ற ரகசிய திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இதைத் தெரிந்துகொள்ளும் ஒரு சாதாரண குடிமகன் தன் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. அமெரிக்காவில் ஆரம்பித்து, இந்தியா, சீனா என்று பயணித்து ஆப்பிரிக்காவில் முடிகிறது - சொல்லப்போனால், தொடங்குகிறது!


படங்கள்:http://www.whowillsurvive2012.com/

உலக உருண்டையின் உள்ளே ஏற்படும் மாற்றங்கள், கண்ட நகர்வு, நிலப்பரப்பு உள்வாங்குதல் (அ) உருக்குலைதல், அதனால் இன்னமும் கனன்று கொண்டிருக்கும் பூமியின் உள்பகுதி வெப்பக் குழம்புகள் வெளிவருதல், கடலுக்குள் நிலம் அமிழ்ந்துபோதல், இதையெல்லாம் கடந்து ஒரு குடும்பம் ரகசியமாகத் தயாரிக்கப்பட்டு வரும் கப்பலைத் தேடிப் பயணிக்கிறது. அதை அவர்கள் எப்படி அடைந்தார்கள்? எப்படித் தப்பிக்கிறார்கள்? என்பது 2012-ல்.

படத்தில் ஏகப்பட்ட சுவாரசியங்கள். இயற்கை ஏற்படுத்தும் பேரழிவுகளை செயற்கையான கிராஃபிக்ஸில் மிரளும் விதத்தில் தந்திருக்கிறார்கள். செயற்கையான கட்டடங்கள், வாகனங்களின் பேரழிவுகள் கண்ணைவிட்டு இன்னும் அகலவில்லை. படத்தில் எல்லாமே பிரம்மாண்டம்தான். இந்த அழிவுகளைத் தரையில் இருந்து பார்ப்பது அத்தனை வியப்பைத் தராது என்பதாலோ என்னவோ, கேமரா பாதிநேரம் வானிலேயே பயணிக்கிறது. அதற்குத் தோதுவாக பயணங்களும் விமானத்தில் அமைவது பொருந்திப்போகிறது.

படம்: www.sbs.com.au/films/movie/4432/2012

முதற்பாதியின் அத்தனை பரபரப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்பது ஒரு குறை. ஆனால் இரண்டாம் பாதியில் மனித இனம், அன்பு, புதுவாழ்வு, இதையெல்லாம் பற்றிப் பேசி உணர்ச்சிக் கடலில் ஆழ்த்திவிடுகிறார்கள். உலகம் கடலில் ஆழ்வதும் சேர்ந்தே நடக்கிறது.

இப்படத்தைப் பற்றி எழுத இன்னும் அதிக இடம் தேவைப்படும் என்பதால் இத்தோடு முடிக்கிறேன்.

தமிழ் டப்பிங்:
இதைப் பற்றி நான் சொல்லியே தீர வேண்டும். இத்தனை அழகாக, எத்துணைப் பொருத்தமான மொழிமாற்றம். மிகச்சரியாக சில இடங்களில் ஆங்கிலத்தை அப்படியே பயன்படுத்தி, சரியான வார்த்தைகள்! அப்பப்பா! தமிழில் மாற்றிய குழுவிற்கு ஒரு சபாஷ்.

இப்படத்தைப் பற்றி மேலும் எனது உளறல்கள் வரும் நாட்களில்....
இப்படத்தின் ஆங்கில வெர்ஷனைப் பற்றி நம்ம 'ஹாலிவுட் பாலா' எழுதிவிட்டார் - இங்கிட்டு போயி படிச்சிக்குங்க.

சரி, LIC-ல இப்போ எந்த பாலிசி ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கு? :)

5 comments:

பாலா said...

அப்படீங்களா? தமிழ் டப்பிங் அவ்வளவு சூப்பரா?

ஆனா.. கருமம்.., எப்படி இருக்குன்னு கூட.. இன்னொரு முறை இந்த படத்தை பார்க்க முடியாது.

கொடுமை!

சென்ஷி said...

தமிழ் டப்பிங்க் டவுன்லோடு கிடைக்கறது இல்லை.. நீங்க சொன்னபிறகு தமிழ் வெர்சன் எப்படி இருக்கும்ன்னு பார்க்க/ கேக்க ஆசையா இருக்கு

முனைவர் இரா.குணசீலன் said...

ஓகோ..

ஊர்சுற்றி said...

எல்லோருக்கும் ஒரு நன்றி.

ஹாலிபாலா,
விசுவல் எஃபெக்ட்டுக்காகத்தான படமே சுவாரசியமாக போகுது. மத்தபடி கதையெல்லாம் வழக்கமா வர்றதுதானே! விடுங்க பாஸ்.

Suba said...

romba ethirpaarpoda vantha padam., neenga sonna maathiri padathoda muthal paathi kodutha effecta rendaavathu paathi kdukala... and., sila idathula logic niraiya sothapal! and eppo scifi kulla sentiment-a puguthinaangalo., apove therinju pochu, padam avlo odaathunu... :(