Tuesday, October 22, 2019

கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்! - நூல் அறிமுகம்







இந்நூலானது,  மதங்களின் மீது, மறைந்த தோழர் புவனன் (நாத்திக மையம், நாகர்கோவில்) தொடுத்த கருத்தியல் யுத்தம்! ஒரு பெரியாரிஸ்ட் மதங்கள் மீது நடத்திய மறுவிசாரணை! பகவத் கீதை, பைபிள், குரான் மீதான கேள்விக்கணைகள்!
  • இந்து மதம் மட்டுமே விமர்சிக்கப்படுகிறதா?
  •  மதநூல்களின் கதைகள் அறிவுக்கு உகந்தவையா?
  • நாத்திகம் வேண்டும், ஏன்?
இதுபோன்ற வினாக்களுக்கு விடையாக இந்நூல் இருக்கிறது.


இந்நூலைப் பற்றி, மறைந்த தோழர் புவனன் அவர்களின் வரிகளிலேயே சொல்ல வேண்டுமானால்....




“இந்தப் புராண, இதிகாச, வேதம் என்பவை, அவை எவ்வளவு செல்வாக்கு பெற்றவையாக இருந்தாலும், அது கண்டு மனம் தளராமல், மலைத்துவிடாமல், அவை பற்றிய உண்மைகளை ஆராய்ந்து, அவை மனிதனால் மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட பழைய கற்பனைகள், கதைகள், வாழ்க்கை முறைகள் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டி, அவற்றின் மயக்கத்திலிருந்து அவர்களை விடுவித்து, மனிதர்களாக்கிப் பார்ப்பதைவிட, அதற்குப் பாடுபடுவதைவிட, மனிதாபிமானம் படைத்தவர்களுக்கு வேறு என்ன வேலை இங்கு இருக்க முடியும்?”
- புவனன்

No comments: