பதினைந்து வருடங்களுக்கு முன்பே இந்த நிலை என்றால் நூறு வருடங்களுக்கும் முன்பு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை! 'ஆயிரம் SMS-ல சொல்றத ஒரு MMS-ல சொல்லிடலாம்' என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை! அதை உண்மை என்று நிரூபிக்கிறது 'டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்' திரைப்படம். அம்பேத்கரின் அமெரிக்க கல்லூரி வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்கும் படம், வரிசையாக இந்தியாவின், இந்து மதத்தின் - அப்போதைய(ஏன் இப்போதையதும் கூட) வறட்டுக் கொள்கைகளையும் முட்டாள்தனமான விசயங்களையும் சுட்டுப் பொசுக்கிக்கொண்டே பயணிக்கிறது.
அம்பேத்கரின் குரல், எந்தச் சூழ்நிலையில் 'காந்தி' என்கிற மகாசக்திக்கு எதிராக முழங்கியது என்பதன் பின்புலத்தை உங்கள் மனதில் ஆழப் பதியவைக்கிறது இந்தப் படைப்பு. இந்தியப் பிரிவினைக்கு 'காந்தி'யின் மீது பழிசுமத்தும் கும்பல் எழுதும் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் 'தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக காந்தி எழுப்பிய மந்தமான குரலை'க் கண்டிப்பதைப் பார்க்க முடியாது.
ஏனென்றால்,
'இந்து மதத்தில் எல்லோரும் ஒன்றுதான்' என்று முழங்கி, அதன் பல நூற்றாண்டுகால சமூகக்கழிவான 'சாதி', அதன் நாற்றமான 'தீண்டாமை' என்பதை மறைமுகமாக ஆதரித்தவர், காந்தி(அல்லது, உயர்சாதியினரின் பிடிவாதத்தால் கண்டுகொள்ளாமல் இருந்தவர்). இதை உலகுக்கு உரத்துச் சொன்னவர்களில் முக்கியமானவர்களுள் ஒருவர் அம்பேத்கர் மற்றொருவர் நம் கிழட்டுச் சிங்கம் - பெரியார்!
சாதிகள் பற்றிய அம்பேத்கரின் ஆய்வுகள் பற்றியும், காந்திக்கு எதிரான நிலைப்பாட்டினால் அவரது அரசியல் வீழ்ச்சிகள் பற்றியும், நாட்டு விடுதலை எப்படி சமூக விடுதலையை ஆக்கிரமித்துக்கொள்கிறது என்பதையும் தெளிவாக குழப்பமில்லாமல் சொல்லிச் செல்கிறது 'டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர்' என்ற இந்தக் காவியம். காந்தியையும் காங்கிரஸையும் எதிர்த்த அம்பேத்கரே, பின்னாளில் சட்டத்திற்காகவும், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் அதே காங்கிரஸ் அமைச்சரவையில் இணைந்ததும், இந்திய அரசியலமைப்புச் சட்டக் குழுவிற்குத் தலைமை தாங்கியதும் வரலாறு.
இந்தியாவின் வரலாறு பற்றியும், சாதிகள் பற்றியும், இந்திய விடுதலை வரலாற்றின் மற்றொரு பக்கத்தையும் தெரிந்துகொள்ள நினைக்கும் எல்லோரும் பார்க்கவேண்டிய படம், இந்த 'டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்'.
ஒரு கவனிப்பு:
சென்னையில்,
ஐந்தாறு திரையரங்குகள்
அதிகபட்சமாக 40 காட்சிகள்
ஒரு காட்சிக்கு சராசரியாக 300 நபர்கள் (என்று வைத்துக்கொண்டாலும்)
மொத்தம் 12000 பேர்.
இந்தச் சீட்டுகளே முழுமையாக விற்கப்படவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது. அதுவும் மேல்தட்டு மக்கள் அதிகம் செல்லும் சத்யம், ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் பாதி மட்டுமே நிரம்பியது. இந்த எண்ணிக்கையில் கூட அம்பேத்கர் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் நபர்கள் இல்லையா!
பின்வருவனவற்றில் எது சரியாக இருக்கும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
*அம்பேத்கர் யாருக்காகப் போராடினாரோ அவர்களுக்கு அம்பேத்கர் மீது எந்த ஈடுபாடும் இல்லை.
*தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்பட்டவர்களிடமிருந்து, இந்த அளவு எண்ணிக்கையில் கூட, பொருளாதார ரீதியாக மேல்தட்டு மக்கள் உருவாகவில்லை.
*படிப்பறிவின்மையும், அடிமைத்தன உணர்வும் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து முழுமையாக இன்னும் அகலவில்லை, அதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக இன்னும் மேன்மையடையவில்லை.
*அம்பேத்கர் பற்றி தேவையான அளவிற்கு எல்லாமும் தெரிந்துவைத்திருக்கிறார்கள் நம் மக்கள்!
*இந்த மாதிரி மேல்தட்டு மக்களுக்கான திரையரங்குகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையவிரும்பவில்லை.
********
'பால அபிராமி' தியேட்டரில் வரவிருக்கின்ற மூன்று வார இறுதி நாட்களில் (டிசம்பர் 11,12,18,19,25,26 ஆகிய விடுமுறை தினங்களில் காலை 91.5 மணிக்கு) இந்தத் திரைப்படம் திரையிடப்படுகிறது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
5 comments:
அட... நமது பார்வை ஒரே மாதிரி இருக்கிறது...
குறிப்பாக...
// அம்பேத்கர் யாருக்காகப் போராடினாரோ அவர்களுக்கு அம்பேத்கர் மீது எந்த ஈடுபாடும் இல்லை //.
// இதை உலகுக்கு உரத்துச் சொன்னவர்களில் முக்கியமானவர்களுள் ஒருவர் அம்பேத்கர் மற்றொருவர் நம் கிழட்டுச் சிங்கம் - பெரியார்! //
நீங்கள் என்னுடைய பதிவையும் படித்து கருத்து தெரிவிக்க வேண்டுமென விழைகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2010/12/vs.html
நன்றி பிலாசபி பிரபாகரன்! :)உங்கள் பதிவைப் படித்தேன்.
அப்புறம், பதிவுலகில் இருக்குற நானும் ரொம்ப சின்னவன்தான், தெரியுமா?!
மிக நல்ல பதிவு நண்பா..என்க்கும் இந்த படத்தை பார்க்க ஆர்வம் தான்..ஆனால் நம்ம ஊரில் படம் திரையிடபடவில்லை..டிவிடி யாவது வாங்கி பாத்துரணும்...
வருகைக்கு நன்றி ஹரிஸ். :)
கட்டாயமா, வாங்கி பாருங்க!
நானும் சென்ற வாரம் படம் பார்த்தேன், ஜான்சன், சென்னை சத்யம் அரங்கில்! மிகவும் கவர்ந்தது! மம்முட்டி மிகச்சிறப்பாக செய்திருந்தார்! அம்பேத்கர் படம் பற்றி நான் இட்ட பதிவு இங்கே .....http://madrasbhavan.blogspot.com/2010/12/blog-post_05.html. என் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com. இன்று முதல் தங்கள் வலையகத்தை பின்தொடர்கிறேன்! எப்ப சென்னையை சுற்றலாம்?? தெரிவியுங்கள்.
Post a Comment