நானும் என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். கூகிளாண்டவரிடம் கெஞ்சி கூத்தாடி கேட்டேன். ஆனால், என்னால் முடிந்தது எல்லாம் ஆங்கிலத்திலேதான் செய்ய முடிஞ்சது. அப்போதுதான் 'மேக்' குழுமத்தில ஒருவர் 'தமிழ் யுனிகோட் எழுத்துரு' ஏதாவது ஒன்றை நிறுவினால் போதும் என்றார். நானும் கையில் கிடைத்த தமிழ் எழுத்துருக்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவிப் பார்த்தேன். இப்போது, கட்டம் கட்டமாக இல்லாமல் ஒரு புதிய வரிவடிவத்தில் எழுத்துக்கள் தோன்றின. ஒருவேளை நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவாதங்களைக் கருத்தில் வைத்து, தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஆப்பிள் மேக் நிறுவனத்தார் இப்போதே நடைமுறையில் கொண்டுவந்துவிட்டார்களோ! என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. இதோ பாருங்கள் இந்தப் படத்தை!
http://tamilcpu.blogspot.com/2010/04/106.html
இதப் படிச்சதுக்கு அப்புறம்தான் புரிஞ்சது. மேக் இயங்குதளத்தை நிறுவும்போது, விருப்பத் தேர்வுகள் பிரிவில் இருக்கும் ஒரு எழுத்துருதான் 'Inaimathi.tff'. இதுதான் யுனிகோட் தமிழ் எழுத்துருக்களை மேக்புக் ப்ரோவில் காண்பிக்கும் வேலையைப் பார்க்கிறது. அது என்னுடைய கணிணியில் இல்லை - அதனுடனே சேர்ந்து இன்னும் சில தமிழ் எழுத்துருக்களும். பின்னர் அதற்கான குறுவட்டை எடுத்து இவற்றையெல்லாம் சேர்த்து நிறுவியதும் கணிணியில் தமிழ் எழுத்துக்கள் எந்த வரிவடிவ குளறுபாடும் இல்லாமல் தெளிவாகத் தெரிந்தன. இப்போது இந்த இடுகையை(ஒரு வாரத்திற்குப் பிறகு) எழுதி முடித்துவிட்டேன்.
மேற்கண்ட சுட்டியில் மேக்புக்் 10.6 ல் இருக்கும் மிக எளிமையான தமிழ் உள்ளீடு முறை பற்றி அழகாக விளக்கியிருக்கிறார் ந.ர.செ. ராஜ்குமார்.
''அப்போ நீ என்னடா சொல்ல வர்றே؟'' என்கிறீர்களா....
இங்கு நான் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். மேற்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி உள்ளீடு முறையைத் தேர்ந்தெடுத்த பின்பு ஆங்கிலம் மற்றும் தமிழுக்கு மாறுவதற்கு சில 'சுருக்கு விசை' களை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். எப்படியெனில்,
System Preferences -> Keyboard -> Keyboard Shortcuts -> Keyboard & Text Input -> Select the Previous Input Source
இங்கு உங்களுக்குப் பிடித்தமான 'சுருக்கு விசை(களை)' தேர்வு செய்து கொள்ளலாம். நினைத்த நேரத்தில் தமிழ் - ஆங்கிலத்தில் மாறி மாறி தட்டச்சலாம்.
"அது சரி 'ஆப்பிள் மேக்' னா என்ன؟" என்பவர்களுக்கு..... இதோ
நானும் இதப்பார்த்து கொஞ்சநாள்தாங்க ஆச்சு....
4 comments:
தகவல் அசத்தல்... படம் :)
ஸ்ரீ....
மேக் புக் நிச்சயம் டெக்னாலஜியில் ஒரு படி மேலேதான்..
முழு பயன்பாடும் மைக்ரோசாஃப்ட்லேர்ந்து வேறுபட்டிருக்கும்.
ஸ்ரீ... பேர மாத்திட்டீங்க போல؟!!
நன்றி அப்துல்மாலிக்.
மேக் வாங்கலாம்னு இருக்கேன்.. நல்ல வேலை இந்த மேட்டரை சொன்னீங்க! நன்றி
இதை மைண்ட்ல வைத்துக்குறேன் :-)
Post a Comment