Thursday, March 22, 2007

சென்னை சங்கமம் – 2007

தமிழ் மையம்,தமிழக சுற்றுலாத்துறை மற்றும் HELLO எப்.எம். இணந்து நடத்திய தமிழக பாரம்பரிய கலைகளுக்கான திருவிழா, கடந்த மாதம்(பிப்ரவரி) 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடந்தது. இது சென்னையின் பல்வேறுஇடங்களில், முக்கியமாக மக்கள் கூடும் பொது இடங்களான பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் நடந்தது.

தமிழகத்தில் இது போன்ற விழா நடத்தப்படவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். பல வித்தியாசங்களுடன் வெளிவந்த இந்நிகழ்ச்சி பல விமர்சனங்களுக்கும் உள்ளாகியது. முக்கியமாக எதிர்மறை விமர்சனங்கள்.

விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பவர்கள், த்மிழ் மையத்தின் ஜெகத் கஸ்பாரும் முதல்வரின் மகள் கவிஞர் கனிமொழியும்.

குற்றச்சாட்டுகள்:

1.அவசரமாக இவ்விழாவினை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
2.விழாவிற்கான அரசாணைகள் எப்படி இவ்வளவு வேகமாக வழங்கப்பட்டன?
3.வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் பேர் வருவார்கள் எனப் பேசப்பட்டது, ஆனால் அப்படி யாரும் வந்த்ததாகத் தெரியவில்லையே?
4.ரெயின்போ பிரிட்ஜ், ராக் மியூசிக், கார்த்திக் ஹார்ட் பீட்ஸ், ராக் பேன்ட் இந்த கலைகள் எல்லாம் எந்த காலத்தில் தமிழ் கலையானது??!

பெரும்பாலும் இவை விமர்சனங்களாக இல்லாமல் அரசு எந்திரத்தின் மீதான குற்றச்சாட்டுகளே.(1-3).
விழாவிற்கான அரசு அனுமதிகள் மிக விரைவாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.
>அப்படியாயின், நமது அரசு அலுவலகங்கள் விரைவாக பணியாற்றும் திறமை கொன்டுள்ளவை என்பது நிரூபணமாகிறது. இதை எல்லா நிலைகளிலும் பின்பற்றலாமே?! கனிமொழி முதல்வரின் மகள் என்பதால் மட்டும்அவை விரைவாக வழங்கப்பட்டிருந்தால் அது நிச்சயம் தவறு.

>எந்த திருவிழாவானாலும் அதன் தொடக்க காலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எப்படி வருவார்கள்? அவர்களுக்கு எப்படி இந்நிகழ்ச்சி பிரபலமாகியிருக்க முடியும்? ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்து நடந்து அது புகழ் பெற்றால்தான், பிறகு வருவார்கள்.

>ஆனால் தமிழக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் என்று கூறிக்கொன்டு ராக் போன்ற இசை நிகள்ச்சிகளை அனுமதித்தது ஜெகத் கஸ்பாரும் கனிமொழியும் செய்த தவறுதான்.

எப்படியாயினும், தமிழ் மக்கள் அனைவரும், இந்த புது முயற்சிக்கு வித்திட்டவர்களை கட்டாயம் வாழ்த்தியாக வேன்டும் என்பது என் கருத்து.

இவ்விழாவே எதிர்காலத்தில் தமிழகத்தின் மிகப்பெரும் திருவிழாவாக உருவெடுக்கலாம். எனவே இதன் அமைப்பாளர்கள் தமிழ்க்கலைகளுக்கு மட்டும் அனுமதியளித்து, எந்த குழப்பமும் இல்லாமல் நடத்த முயற்சி செய்ய வேண்டும்.


சென்னை சங்கமம் தொடர்பான பிற பதிவுகள்:
>>பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சி!
>>நேரடி ரிப்போர்ட்
>>சென்னை சங்கமம் - தொடக்க விழா!
>>சென்னை சங்கமம் - 2
>>வாழ்க சென்னை சங்கமம்!!!!!
>>பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு உதவுமா?
>>சென்னை சங்கமம் - தொகுப்பு

No comments: