Friday, March 12, 2021

எஞ்சாயி எஞ்சாமி வரிகள் (Enjoy Enjaami Lyrics)

ENJOY ENJAAMI LYRICS - Dhee | Arivu

குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா கள வெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளைக்கி
குக்கூ குக்கூ
கம்பளிப் பூச்சி தங்கச்சி

அல்லிமலர்க் கொடி அங்கதமே
ஒட்டாற ஒட்டாற சந்தனமே
முல்ல மலர்க் கொடி முத்தாரமே.. (அப்டி)
எங்கூரு எங்கூரு குத்தாலமே

சுருக்குப் பையம்மா வெத்தல மட்டையம்மா
சொமந்த கையம்மா மத்தளம் கொட்டுயம்மா
தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி சங்கதிய கூறேண்டி
கண்ணாடிய காணோண்டி இந்தார்றா பேராண்டி

அன்னக்கிளி அன்னிக்கிளி அடி அடி ஆலமரக்கெள வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணக் கொடுத்தானே பூர்வக்குடி
கம்மங்கர காணியெல்லாம் பாடித்திரிஞ்சானே ஆதிக்குடி
நாயி நரி பூனைக்குந்தான் இந்த ஏரி கொளங்கூட சொந்தமடி

எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி
எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்கு


பாடுபட்ட மக்கா வரப்பு மேட்டுக்காரா
வேர்வதண்ணி சொக்கா மினுக்கும் நாட்டுக்காரா
ஆக்காட்டி கருப்பட்டி ஊதாங்கோலு மண்ணுசட்டி
ஆத்தோரம் கூடுகட்டி  ஆரம்பிச்ச நாகரீகம்
சஞ்சன சனக்கு சன மக்களே
உப்புக்கு சப்பு கொட்டு முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
அட்டைக்கு ரத்தங்கொட்டு கிட்டிப்புல்லு வெட்டு வெட்டு

நான் அஞ்சுமரம் வளத்தேன்... அழகான தோட்டம் வச்சேன்...
தோட்டம் செழிச்சாலும்.... என் தொண்ட நனையலையே...

கடலே... கரையே... வனமே... சனமே... நெலமே... கொலமே... இடமே... தடமே...

எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி
எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினம்தான் சுத்தி வந்தா சேவ கூவிச்சி
அது போட்டு வச்ச எச்சம்தானே காடா மாறிச்சு
நம்ம நாடா மாறிச்சு இந்த வீடா மாறிச்சு

என்ன கொற என்ன கொற
என் சீனி கரும்புக்கு என்ன கொற
என்ன கொற என்ன கொற
என் செல்லப் பேராண்டிக்கு என்ன கொற

பந்தலுல பாவக்கா பந்தலுல பாவக்கா
விதக்கல்லு விட்டிருக்கு அது விதக்கல்லு விட்டிருக்கு
அப்பனாத்தா விட்டதுங்க அப்பனாத்தா விட்டதுங்க


எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி
எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி


எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி
எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

கடலே... கரையே... வனமே... சனமே... நெலமே... கொலமே... இடமே... தடமே...
குக்கூ குக்கூ 

Artist : Dhee ft. Arivu
Lyrics : Arivu
Producer :
Santhosh Narayanan
Director : Amith Krishnan (Studio MOCA)
Produced by : maajja
https://www.youtube.com/watch?v=eYq7WapuDLU

Tuesday, October 22, 2019

கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்! - நூல் அறிமுகம்







இந்நூலானது,  மதங்களின் மீது, மறைந்த தோழர் புவனன் (நாத்திக மையம், நாகர்கோவில்) தொடுத்த கருத்தியல் யுத்தம்! ஒரு பெரியாரிஸ்ட் மதங்கள் மீது நடத்திய மறுவிசாரணை! பகவத் கீதை, பைபிள், குரான் மீதான கேள்விக்கணைகள்!
  • இந்து மதம் மட்டுமே விமர்சிக்கப்படுகிறதா?
  •  மதநூல்களின் கதைகள் அறிவுக்கு உகந்தவையா?
  • நாத்திகம் வேண்டும், ஏன்?
இதுபோன்ற வினாக்களுக்கு விடையாக இந்நூல் இருக்கிறது.


இந்நூலைப் பற்றி, மறைந்த தோழர் புவனன் அவர்களின் வரிகளிலேயே சொல்ல வேண்டுமானால்....

Monday, April 1, 2019

Super Deluxe (சூப்பர் டீலக்ஸ்) - The Movie

சில படத்துல ஒரு சில காட்சிகளப் பாக்கும்போது நெஞ்சுல ‘பக் பக்’குன்னு, மூளைல ‘கிர்ர்ர்ர்’ன்னு, ஒரு திகிலோட, பதட்டத்தோட இருக்குமே, இதையே படம் முழுக்கத் அள்ளித் தெளிச்ச மாதிரி ஒரு படம் பார்க்கணும்னு ரொம்பநாளா காத்திட்டு இருந்தது, Super Deluxe மூலமா நிறைவேறியிருக்கு.


படத்தோட ஒவ்வொரு நிமிசமும், திகிலும், பரபரப்பும், எதிர்பார்ப்பும், சுவாரசியமும் மாறி மாறி வந்து பரவசமூட்டுகிற ஒரு அனுபவம்! கடைசி நிமிசம் வரைக்கும் நெஞ்சுக்குள்ள ஒரு வெயிட்ட வைச்சி விட்ட மாதிரியான சம்பவங்கள்! சீட்டு நுனிக்கு வர்றதுன்னு சொல்வாங்கல்ல, சீட்டு இருக்குறதையே மறக்க வைக்கிறமாதிரியான அனுபவம்னா அது இதுதான்.

Tuesday, December 9, 2014

ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி

கத்திரி கேசாத்ரி சொல்றது என்னான்னா....

நரேந்திர மோடி கேபினெட்ல ரெண்டு பிராமணாள சேர்த்துண்டத பாராட்டினது நாட்ல பெரிய பிரச்சினையாயிடுது.

ஏதோ அந்த காலத்துல சொசைட்டில எங்களவாள்லாம் பெரிய இடத்துல இருந்தா. ஆனா இப்ப அப்படியா இருக்கு? எங்களவாளுக்கெல்லாம் ஏதோ  கொஞ்சோண்டுதான் பவர் இருக்கு. (என்ன பத்தாயிரம் இருபதாயிரம் புக்கு விக்குற அளவுக்கு இருக்குமா?) எண்ணிக்கைல எங்களவாள்லாம் கொஞ்சமாத்தான் இருக்கா! பொது இடத்துல பார்க்கக்கூட முடியாது. (ஆமா, அவாள்லாம் கார்ல போவா, பெரிய பெரிய மால்லதான் இருப்பா. சாதாரண மக்கள் இருக்குற இடத்துக்கு ஏன்  வரப்போறா?) இதே நிலமதான் தமிழ்நாட்லேயும்.

சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடியே, தமிழ்-தெலுங்கு பிராமின் சர்க்கார் உத்தியோகத்துல ஏகத்துக்கும் இருந்தா. எப்ப இந்த 'ஜஸ்டிஸ் பார்ட்டி'யும் 'திராவிடாள் குரூப்'பும் சேர்ந்துண்டு கோட்டாவ கொண்டு வந்தாளோனோ, அன்னிக்கே போச்சு. மெடிக்கல் சீட்ல நம்மவாளுக்கு இடம் இல்ல, கவர்மென்ட் உத்தியோகத்துலேர்ந்து, என்ஜினீரிங்க் காலேஜ்லேர்ந்தெல்லாம் மொத்தமா விரட்டியடிச்சுட்டா.(அப்புறம்?)

அரசியல்ல முழுசா எந்த அதிகாரமும் இல்லாம ஆக்கிட்டா. தமிழ்நாட்ல நடந்த இந்த அநியாயத்தெல்லாம் பார்த்துண்டு, எங்களவால்லாம் பம்பாய்க்கும் டெல்லிக்கும் வேலைக்குப் போனா. இதெல்லாம் 1970-ல (அச்சச்சோ, என்னா அடக்குமுறைக்கெல்லாம் ஆளாகியிருக்கா பாருங்கோ!). 1900-க்குப் பின்னாடி நிறைய இன்ஜினீரிங் காலேஜ் வந்தபின்னாடி, பிராமணாள்லாம் இன்ஜினீரிங்க படிச்சா அப்புறம் இந்த ஐ.டி. மேனேஜ்மென்ட்ல தேவை அதிகமானதுனால MBA படிச்சா. இன்னிக்கு ஐ.டி. மேனேஜ்மென்ட், ஆடிட்டிங்ல எல்லாம் நம்மாளுங்கதான் இருக்கா.

நிறைய பேரு யு.எஸ். போயிட்டா. பின்ன, அங்க சிலிக்கான் வேலி வளர்ச்சியெல்லாம் நம்மவளாவாலதானே. இந்தியாவுலயே நிறையபேரு தொழில் தொடங்கினா, ஐ.டி.புரட்சிக்கு வழிவகுத்தா.

என்னதான் நாங்கல்லாம் அரசியல்ல இருந்து விலகியிருந்தாலும், தமிழ்நாட்ல எதுக்கெடுத்தாலும் எங்களதான் திட்டுறா! மோடி பிராமினிக்கல்ங்குறா, ஜெயலலிதா கூடதான் பிராமினிக்கலா இருக்கா. ஆனா, இந்த திமுகவுக்கு மட்டும்தான், சான்ஸ்கிரிட்ட ப்ரோமோட் பண்ணாலும் பிராமினிக்கல், 'இந்தி'ய ப்ரோமோட் பண்ணினாலும் ப்ராமினிக்கல். எல்டிடிஈ-க்கு எதிரா பிஜெபியோ காங்கிரஸோ, யார் பேசினாலும் ப்ராமினிக்கல். மார்க்கெட் எகானமி, க்ளோபலைசேசன் கூட ப்ராமினிக்கல்ங்குறா.

தமிழ்ல படம் எடுக்குறாளோ இல்லியோ, இவால்லாம் எப்பவுமே எங்களவாள 'பேடா’தான் காட்டுறா. இப்பகூட 'ஜீவா'ன்னு ஒரு படம் வந்ததோணோ, அதுல கூட ஏதோ எங்களவா எல்லாம் சேர்ந்து சதி பண்ணிதான் அவாளயெல்லாம் ஸ்டேட் லெவல் டீம்ல விளையாடவிடாம பண்ணிட்டதா சொல்றா. பிராமின்ஸ்லாம் மத்தவங்கள 2000 வருஷமா அடக்கியாண்டாங்க, படிக்கவிடாம பண்ணிட்டாங்கன்னு சொல்றதெல்லாம் இப்ப பேஷனாயிடுத்து. அவா அவா இஸ்டத்துக்கு பேசறா. எதுக்கும் ஆதாரம் கிடையாது, அடுத்து எந்த ஆராய்ச்சியும் கிடையாது. (இந்த கட்டுரைக்கு எத்தன புள்ளிவிவரங்கள அம்பி கொடுத்திருக்கா? நீங்களே பாத்துக்கோங்கோ).

பிற்படுத்தப்பட்டவா பண்ற அடிதடிக்கெல்லாம்கூட நாங்கதான் காரணம்ங்குறா! இந்த சாதில்லாம் உருவாக்குனது நாங்கதான்தானாம், அதனால இதுக்கெல்லாம் நாங்கதான் பொறுப்புங்கறா. ஆனா, உண்மை அது கிடையாது.

புள்ளிவிவரங்கள்லாம் கூட இருந்தாலும் (ஆனா புளைளையாண்டன் கொடுக்கமாட்டன்!), அங்கங்க பாக்குறத காதுபட கேக்குறத வச்சி சொல்றேன், பிராமின்ஸ்தான் நிறைய இன்டர்-காஸ்ட் மேரேஜ் பண்ணியிருக்கா. நாங்கல்லாம் கௌரவக்கொலை பண்றது இல்ல பாருங்கோ.

நாங்கள்லாம்தான் இந்த மாநிலத்தோட கலையைப் பாதுகாக்குறோம், பழமையான நினைவிடங்களை சின்னங்களைப் பாதுகாக்குறோம், இந்த மாநிலத்தோட கலாச்சாரத்தையே பாதுகாக்குறோம் (என்னாதூ?). தமிழ் மொழி வளர்ச்சிக்கு எவ்வ்வளவோ பண்ணியிருக்கோம். அறிவியல், இன்ஜினீரிங், மெடிக்கல் அப்புறம் கல்விக்கு இந்த மாநிலத்துக்காக எவ்வளவோ பண்ணியிருக்கோம்.(ஓஓஓஓ அப்படியா?)

ஆனா, அரசியல்ரீதியா ஒதுக்கப்பட்ட, சமுதாயத்தால பழிக்கப்பட்ட இந்த தமிழ் பிராமணர்கள் அவங்களோட அடையாளத்த எப்படிப் பாதுகாக்கப்போறோம்னு தெரியல? அதேநேரத்துல பாதுகாப்பா எப்ப உணரப்போறோம்னும் தெரியல?

படிப்புலயோ, வேலைலயோ, அரசியல்லயோ பிராமணாளுக்கு எந்த இட ஒதுக்கீடும் கிடைக்க வாய்ப்பில்லே. எங்களவாளுக்கு வேண்டியதெல்லாம், மத்தவாளப் போல இந்த நாட்டுக்கு சேவைசெய்யுறதுக்கான வசதியான சூழல்தான். ஒரு லிபரல் நாட்ல, எப்படி மத்தவாள்லாம், அதான் இந்த முஸ்லிம், கிறிஸ்டியன்ஸ், பார்சி, ஜெயின்லாம், தங்களுக்குன்னு நம்பிக்கை, கலாச்சாரம், பழக்கவழக்கம், உடை, மொழின்னு இருக்காளோ, அதேமாதிரி தமிழ் பிராமின்ஸும் தங்களோட அடையாளத்தோட இருக்கணும்னு நினைக்குறா.
எங்களவாள பிராமினா இருக்க விடுங்கோ,
தமிழனா இருக்க விடுங்கோ,
இந்தியனாவும் இருக்க விடுங்கோ!

எங்களுக்கு எதிரான இந்த எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்ல மாறணும்! (பஞ்ச் டயலாக்கா?)

Sunday, January 19, 2014

செல்லமுத்து குப்புசாமி சொன்ன கதை - இரவல் காதலி (நாவல்)

இதன்ஆசிரியர், ஐ.டி. துறையில் பணிபுரிபவர் என்கிற அறிமுகத்தின் காரணமாக, இந்த ஆண்டு படித்த இரண்டாவது நாவல் இது. (முதலாவது 'இராஜீவ்காந்தி சாலை')

இரவல் காதலி:




      தலைப்பே (ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் கூட) கதையை உள்ளடக்கியிருக்கிறது.  மேலும் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளியாகிவிட்டதால், கதையைப் பற்றி இங்கு விரிவாக விவாதிக்கப்போவதில்லை.

நாவலுக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தளத்தையும் கதையையும் அதற்கான எல்லையையும் தெளிவாக வரையறுத்துக்கொண்டு, நாவல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது - மிகச் சில இடங்களில் ஃபிளாஷ் பேக்கும் உண்டு. கதையினூடாகவே, ஐ.டி.துறையின் சில குறிப்பிட்ட விசயங்கள் பற்றி விளக்கியுள்ளார் ஆசிரியர். வேலைக்கு ஆள் எடுப்பது, புதிய ப்ராஜெக்ட்டுகள் பிடிப்பது  போன்றவை.  மற்றபடி, இது ஐ.டி.துறைக்குள்ளேயே நடக்கும் சம்பவங்களை அதிகம் உள்ளடக்கிய நாவல் இல்லை.