சில படத்துல ஒரு சில காட்சிகளப் பாக்கும்போது நெஞ்சுல ‘பக் பக்’குன்னு, மூளைல ‘கிர்ர்ர்ர்’ன்னு, ஒரு திகிலோட, பதட்டத்தோட இருக்குமே, இதையே படம் முழுக்கத் அள்ளித் தெளிச்ச மாதிரி ஒரு படம் பார்க்கணும்னு ரொம்பநாளா காத்திட்டு இருந்தது, Super Deluxe மூலமா நிறைவேறியிருக்கு.
படத்தோட ஒவ்வொரு நிமிசமும், திகிலும், பரபரப்பும், எதிர்பார்ப்பும், சுவாரசியமும் மாறி மாறி வந்து பரவசமூட்டுகிற ஒரு அனுபவம்! கடைசி நிமிசம் வரைக்கும் நெஞ்சுக்குள்ள ஒரு வெயிட்ட வைச்சி விட்ட மாதிரியான சம்பவங்கள்! சீட்டு நுனிக்கு வர்றதுன்னு சொல்வாங்கல்ல, சீட்டு இருக்குறதையே மறக்க வைக்கிறமாதிரியான அனுபவம்னா அது இதுதான்.
Monday, April 1, 2019
Tuesday, December 9, 2014
ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி
கத்திரி கேசாத்ரி சொல்றது என்னான்னா....
நரேந்திர மோடி கேபினெட்ல ரெண்டு பிராமணாள சேர்த்துண்டத பாராட்டினது நாட்ல பெரிய பிரச்சினையாயிடுது.
ஏதோ அந்த காலத்துல சொசைட்டில எங்களவாள்லாம் பெரிய இடத்துல இருந்தா. ஆனா இப்ப அப்படியா இருக்கு? எங்களவாளுக்கெல்லாம் ஏதோ கொஞ்சோண்டுதான் பவர் இருக்கு. (என்ன பத்தாயிரம் இருபதாயிரம் புக்கு விக்குற அளவுக்கு இருக்குமா?) எண்ணிக்கைல எங்களவாள்லாம் கொஞ்சமாத்தான் இருக்கா! பொது இடத்துல பார்க்கக்கூட முடியாது. (ஆமா, அவாள்லாம் கார்ல போவா, பெரிய பெரிய மால்லதான் இருப்பா. சாதாரண மக்கள் இருக்குற இடத்துக்கு ஏன் வரப்போறா?) இதே நிலமதான் தமிழ்நாட்லேயும்.
சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடியே, தமிழ்-தெலுங்கு பிராமின் சர்க்கார் உத்தியோகத்துல ஏகத்துக்கும் இருந்தா. எப்ப இந்த 'ஜஸ்டிஸ் பார்ட்டி'யும் 'திராவிடாள் குரூப்'பும் சேர்ந்துண்டு கோட்டாவ கொண்டு வந்தாளோனோ, அன்னிக்கே போச்சு. மெடிக்கல் சீட்ல நம்மவாளுக்கு இடம் இல்ல, கவர்மென்ட் உத்தியோகத்துலேர்ந்து, என்ஜினீரிங்க் காலேஜ்லேர்ந்தெல்லாம் மொத்தமா விரட்டியடிச்சுட்டா.(அப்புறம்?)
அரசியல்ல முழுசா எந்த அதிகாரமும் இல்லாம ஆக்கிட்டா. தமிழ்நாட்ல நடந்த இந்த அநியாயத்தெல்லாம் பார்த்துண்டு, எங்களவால்லாம் பம்பாய்க்கும் டெல்லிக்கும் வேலைக்குப் போனா. இதெல்லாம் 1970-ல (அச்சச்சோ, என்னா அடக்குமுறைக்கெல்லாம் ஆளாகியிருக்கா பாருங்கோ!). 1900-க்குப் பின்னாடி நிறைய இன்ஜினீரிங் காலேஜ் வந்தபின்னாடி, பிராமணாள்லாம் இன்ஜினீரிங்க படிச்சா அப்புறம் இந்த ஐ.டி. மேனேஜ்மென்ட்ல தேவை அதிகமானதுனால MBA படிச்சா. இன்னிக்கு ஐ.டி. மேனேஜ்மென்ட், ஆடிட்டிங்ல எல்லாம் நம்மாளுங்கதான் இருக்கா.
நிறைய பேரு யு.எஸ். போயிட்டா. பின்ன, அங்க சிலிக்கான் வேலி வளர்ச்சியெல்லாம் நம்மவளாவாலதானே. இந்தியாவுலயே நிறையபேரு தொழில் தொடங்கினா, ஐ.டி.புரட்சிக்கு வழிவகுத்தா.
என்னதான் நாங்கல்லாம் அரசியல்ல இருந்து விலகியிருந்தாலும், தமிழ்நாட்ல எதுக்கெடுத்தாலும் எங்களதான் திட்டுறா! மோடி பிராமினிக்கல்ங்குறா, ஜெயலலிதா கூடதான் பிராமினிக்கலா இருக்கா. ஆனா, இந்த திமுகவுக்கு மட்டும்தான், சான்ஸ்கிரிட்ட ப்ரோமோட் பண்ணாலும் பிராமினிக்கல், 'இந்தி'ய ப்ரோமோட் பண்ணினாலும் ப்ராமினிக்கல். எல்டிடிஈ-க்கு எதிரா பிஜெபியோ காங்கிரஸோ, யார் பேசினாலும் ப்ராமினிக்கல். மார்க்கெட் எகானமி, க்ளோபலைசேசன் கூட ப்ராமினிக்கல்ங்குறா.
தமிழ்ல படம் எடுக்குறாளோ இல்லியோ, இவால்லாம் எப்பவுமே எங்களவாள 'பேடா’தான் காட்டுறா. இப்பகூட 'ஜீவா'ன்னு ஒரு படம் வந்ததோணோ, அதுல கூட ஏதோ எங்களவா எல்லாம் சேர்ந்து சதி பண்ணிதான் அவாளயெல்லாம் ஸ்டேட் லெவல் டீம்ல விளையாடவிடாம பண்ணிட்டதா சொல்றா. பிராமின்ஸ்லாம் மத்தவங்கள 2000 வருஷமா அடக்கியாண்டாங்க, படிக்கவிடாம பண்ணிட்டாங்கன்னு சொல்றதெல்லாம் இப்ப பேஷனாயிடுத்து. அவா அவா இஸ்டத்துக்கு பேசறா. எதுக்கும் ஆதாரம் கிடையாது, அடுத்து எந்த ஆராய்ச்சியும் கிடையாது. (இந்த கட்டுரைக்கு எத்தன புள்ளிவிவரங்கள அம்பி கொடுத்திருக்கா? நீங்களே பாத்துக்கோங்கோ).
பிற்படுத்தப்பட்டவா பண்ற அடிதடிக்கெல்லாம்கூட நாங்கதான் காரணம்ங்குறா! இந்த சாதில்லாம் உருவாக்குனது நாங்கதான்தானாம், அதனால இதுக்கெல்லாம் நாங்கதான் பொறுப்புங்கறா. ஆனா, உண்மை அது கிடையாது.
புள்ளிவிவரங்கள்லாம் கூட இருந்தாலும் (ஆனா புளைளையாண்டன் கொடுக்கமாட்டன்!), அங்கங்க பாக்குறத காதுபட கேக்குறத வச்சி சொல்றேன், பிராமின்ஸ்தான் நிறைய இன்டர்-காஸ்ட் மேரேஜ் பண்ணியிருக்கா. நாங்கல்லாம் கௌரவக்கொலை பண்றது இல்ல பாருங்கோ.
நாங்கள்லாம்தான் இந்த மாநிலத்தோட கலையைப் பாதுகாக்குறோம், பழமையான நினைவிடங்களை சின்னங்களைப் பாதுகாக்குறோம், இந்த மாநிலத்தோட கலாச்சாரத்தையே பாதுகாக்குறோம் (என்னாதூ?). தமிழ் மொழி வளர்ச்சிக்கு எவ்வ்வளவோ பண்ணியிருக்கோம். அறிவியல், இன்ஜினீரிங், மெடிக்கல் அப்புறம் கல்விக்கு இந்த மாநிலத்துக்காக எவ்வளவோ பண்ணியிருக்கோம்.(ஓஓஓஓ அப்படியா?)
ஆனா, அரசியல்ரீதியா ஒதுக்கப்பட்ட, சமுதாயத்தால பழிக்கப்பட்ட இந்த தமிழ் பிராமணர்கள் அவங்களோட அடையாளத்த எப்படிப் பாதுகாக்கப்போறோம்னு தெரியல? அதேநேரத்துல பாதுகாப்பா எப்ப உணரப்போறோம்னும் தெரியல?
படிப்புலயோ, வேலைலயோ, அரசியல்லயோ பிராமணாளுக்கு எந்த இட ஒதுக்கீடும் கிடைக்க வாய்ப்பில்லே. எங்களவாளுக்கு வேண்டியதெல்லாம், மத்தவாளப் போல இந்த நாட்டுக்கு சேவைசெய்யுறதுக்கான வசதியான சூழல்தான். ஒரு லிபரல் நாட்ல, எப்படி மத்தவாள்லாம், அதான் இந்த முஸ்லிம், கிறிஸ்டியன்ஸ், பார்சி, ஜெயின்லாம், தங்களுக்குன்னு நம்பிக்கை, கலாச்சாரம், பழக்கவழக்கம், உடை, மொழின்னு இருக்காளோ, அதேமாதிரி தமிழ் பிராமின்ஸும் தங்களோட அடையாளத்தோட இருக்கணும்னு நினைக்குறா.
எங்களவாள பிராமினா இருக்க விடுங்கோ,
தமிழனா இருக்க விடுங்கோ,
இந்தியனாவும் இருக்க விடுங்கோ!
எங்களுக்கு எதிரான இந்த எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்ல மாறணும்! (பஞ்ச் டயலாக்கா?)

Sunday, January 19, 2014
செல்லமுத்து குப்புசாமி சொன்ன கதை - இரவல் காதலி (நாவல்)
இதன்ஆசிரியர், ஐ.டி. துறையில் பணிபுரிபவர் என்கிற அறிமுகத்தின் காரணமாக, இந்த ஆண்டு படித்த இரண்டாவது நாவல் இது. (முதலாவது 'இராஜீவ்காந்தி சாலை')
இரவல் காதலி:
தலைப்பே (ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் கூட) கதையை உள்ளடக்கியிருக்கிறது. மேலும் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளியாகிவிட்டதால், கதையைப் பற்றி இங்கு விரிவாக விவாதிக்கப்போவதில்லை.
நாவலுக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தளத்தையும் கதையையும் அதற்கான எல்லையையும் தெளிவாக வரையறுத்துக்கொண்டு, நாவல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது - மிகச் சில இடங்களில் ஃபிளாஷ் பேக்கும் உண்டு. கதையினூடாகவே, ஐ.டி.துறையின் சில குறிப்பிட்ட விசயங்கள் பற்றி விளக்கியுள்ளார் ஆசிரியர். வேலைக்கு ஆள் எடுப்பது, புதிய ப்ராஜெக்ட்டுகள் பிடிப்பது போன்றவை. மற்றபடி, இது ஐ.டி.துறைக்குள்ளேயே நடக்கும் சம்பவங்களை அதிகம் உள்ளடக்கிய நாவல் இல்லை.

Sunday, January 12, 2014
விநாயக முருகன் சொன்ன கதை - ராஜீவ்காந்தி சாலை (நாவல்)
தனது துறை(ஐ.டி.) சார்ந்து, இப்படியான ஒரு நாவல் முயற்சிக்கும் அதற்கான உழைப்புக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் 'விநாயக முருகனு'க்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பலரும் பலவித கோணத்தில் அணுகும் புதிய(?!) துறையைப் (ஐ.டி.) பற்றிய கதை, என்று சொல்வதை விட, 'ராஜீவ்காந்திசாலை'யின் கதை என்றே சொல்ல வேண்டும். நாவலில், ஐ.டி. பற்றி பேசியதைவிட இந்தச் சாலையைப் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது(பெயருக்குப் பொருத்தம்தான்). ஆனால், 'பழைய மகாபலிபுரம் சாலை' என்றே பெயரிட்டிருக்கலாம். ஏனென்றால், இப்போது இந்தச் சாலையில் காணக் கிடைக்கும் மாற்றங்களில் பெரும்பாலானவை (ராஜீவ்காந்தி சாலை) பெயர்மாற்றத்திற்கு முன்பே நடந்தவைதானே!

Wednesday, December 4, 2013
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குப்பையைக் கொட்டி ஆக்கிரமிப்பு!!!
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி ஏற்கெனவே செய்தித் தாள்களிலும், வலைப்பூக்களிலும் பலர் எழுதியிருக்கிறார்கள்.
ஆதங்கத்தில் எழுதப்பட்ட இடுகைகள் சில...
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் (நவ, 2009)
http://haripandi.blogspot.in/2009/11/blog-post_09.html
குப்பை மேட்டில் ஓர் வேடந்தாங்கல்! (மார்ச், 2010)
http://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/
பள்ளிக்கரணை - சதுப்பு நிலக்காடு (2012) - விளக்கப் படங்களுடன் சிறப்பான பதிவு
http://www.raguc.com/2012/06/blog-post.html
செய்திகள் சில:
நவ, 2013-ல் வெளியான ஒரு செய்தி
முதல்வருக்காக விரைவில் வெற்றி விழா: நேரில் சந்தித்த "பெப்சி' நிர்வாகிகள் அறிவிப்பு
http://www.dinamalar.com/news_detail.asp?id=843291
//முதல்வருடனான சந்திப்பு குறித்து, அமீர் கூறியதாவது: தொழிலாளர்களின் கோரிக்கைகளை, 15 நிமிடங்களுக்கு மேலாக, முதல்வர் கவனத்துடன் கேட்டார். வெளி மாநிலத்தில், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை, இங்கு படப்பிடிப்பு தளங்கள் இல்லாத சூழ்நிலை, சென்னையில், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை, சம்பள உயர்வு ஒப்பந்தம் போடாதது என, எல்லா கோரிக்கைகளையும் கேட்டார். பின், கோரிக்கைகளை படித்துவிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களை சந்தித்த முதல்வருக்கு, 23 ஆயிரம் தொழிலாளர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சார்பில், நன்றி. சென்னையில், படப்பிடிப்பு நடத்த, அனுமதி கொடுத்திருப்பதாக, முதல்வர் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு, வீடு கட்ட, பள்ளிக்கரணை அருகில், முதல்வர், 85 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருந்தார். அதன்பின் அந்த இடம், சதுப்பு நிலம் என்பது தெரிய வந்தது. இதனால், வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக, முதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.//
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்க ரூ. 5 கோடி (யாரிடமிருந்து மீட்க?)
http://dinamani.com/edition_chennai/chennai/2013/04/11/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/article1539543.ece
//சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில சூழலியலை மீட்டெடுக்க 2013-14ஆம் ஆண்டில் ரூ. 5 கோடியிலான திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:
112 பறவை இனங்கள், 21 ஊர்வன இனங்கள், 9 நீர்நில வாழ் இனங்கள், 46 வகை மீன்கள், 7 வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஆகியவற்றுக்கு சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வாழ்விடமாக உள்ளது.
2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியலை மீட்டெடுத்துப் பாதுகாக்க ரூ. 15.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2012-13-ம் ஆண்டில் உறைவிட மேம்பாடு, பாதுகாப்பு, ஆராய்ச்சி, விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளுக்கு ரூ. 5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2013-14ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.//
5 கோடி ரூபாய்க்கு என்ன பண்ணினாங்கன்னு கேட்காதீங்க! என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னும் கேட்காதீங்க! இனிமே என்ன பண்ணுவாங்கன்னும் கேட்காதீங்க.
பாதுகாப்பு, விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு-க்கு செலவு பணிணியிருக்கிறதா சொல்லியிருக்காங்க(உறைவிட மேம்பாடு, ஆராய்ச்சி - அப்படி எதுவும் நடக்குதா என்ன?). பழைய அறிவிப்புப் பலகைகளுக்குக் கொஞ்சதூரம் தள்ளி , சில புது அறிவிப்புப் பலகைகளை வைச்சிருக்காங்க.
(இந்த அறிவிப்புப் பலகையெல்லாம் வைக்கிறதுக்குப் பல லட்சம் அல்லது சில கோடிகள் ஆகும் பாருங்க!!)
விழிப்புணர்வுன்னு சொல்றாங்களே, அது யாருக்குத் தேவை? அங்கே குப்பை கொட்டுகிற அரசாங்கத்திற்கா, மாநகராட்சிக்கா? இல்லை சும்மா அந்த வழியா போகிற பொதுமக்களுக்கா?
டிச, 2013 -ல் எடுக்கப்பட்ட கூகிள் மேப் படம்
2007, 2008-களில் நான் கவனித்திருக்கிறேன். அப்போது குப்பை கொட்டப்பட்ட இடங்களிலிருந்து வெகுதூரம் சதுப்புநிலத்திற்குள் குப்பைமேடு(இப்போது) வந்துவிட்டது.
http://www.raguc.com/2012/06/blog-post.html - பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடக்கும் ஆக்கிரமிப்பு பற்றி, இந்தப் பதிவில் ரகு விரிவாக விளக்கியிருக்கிறார். மேலும் சில செய்திகளுக்கான சுட்டிகளும் இடுகையில் இடம்பெற்றுள்ளன.
இன்னும் சில ஆண்டுகளில், இந்த ஆக்கிரமிப்புகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, அரசே இந்தப் பகுதி நிலத்தை, வீட்டுமனைகளாக மாற்றி விற்றாலும் விற்கும்!!!

Subscribe to:
Comments (Atom)