Monday, May 18, 2009

நான் வளர்கிறேனே மம்மி - கேப்டன்!

''கேப்டன்''.

இந்த வார்த்தைதான் தமிழகத்தின் இருபெரும் கழகங்களுக்கு திடீரென்று இல்லை, கடந்த சில ஆண்டுகளாக வேண்டாத வார்த்தையாக மாறியிருக்கிறது.  சில ஆண்டுகளுக்கு முன் முளைத்து இன்று நன்றாகவே வேர்பரப்பி, கிளைகளும் பரப்பி வளர்ந்திருக்கும் (வளர்ந்துகொண்டிருக்கும்) ஒரு அரசியல் ஆலமரம்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.).  

கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே இது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் வாய்ச்சவடால் விட்டு, வித்தைகள் செய்த கட்சிகளே இருந்த இடம் தெரியாமல் போய்விட்ட இந்த தேர்தலில், தன்னுடைய வாக்கு சதவீதத்தை இரண்டு இலக்கங்களில்(10%) கொண்டுபோய் நிறுத்தியது தே.மு.தி.க. விற்கு மைல்கல், மற்ற பெரிய கட்சிகளுக்கு பெரிய 'சறுக்கல்'. அதிலும் 'பணம் விளையாடிவிட்டது' என்று பெரிய கட்சிகளும் அதன் தலைவர்களும் 'ஜகா' வாங்கிக் கொண்டிருக்கும்போது இந்த இரட்டை இலக்கம் கவனிக்கப்படவேண்டியது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே, இப்போதும் தே.மு.தி.க.வின் ஒட்டுக்கள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகளைத் தீர்மானித்திருக்கின்றன.  சுமார் 20க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குகள் தே.மு.தி.க. வசம் சென்று சேர்ந்திருக்கின்றன(மதுரையெல்லாம் விதிவிலக்கு!). இதில் நாம் கவனிக்க வேண்டியது தே.மு.தி.க.- வின் மொத்த பலத்தைத்தானே தவிர 'யாருடைய வெற்றி வாய்ப்பை எப்படி மாற்றியது?' என்பதைப் பற்றியல்ல. 

தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் பதிவான வாக்குகள் 3,09,70,352. 
தே.மு.தி.க. மட்டும் பெற்ற வாக்குகள் 31,25,801. 
சதவீதத்தில் 10.09%. 


7 comments:

நட்புடன் ஜமால் said...

புதுசா வா(ர்)ரவுகளுக்கு சந்தோஷம் தான்.

மீண்டுமொரு கழகமாயில்லாமல் இருந்தால் சரிதான்.

அக்னி பார்வை said...

wait and see

அப்துல்மாலிக் said...

நல்ல அலசல் ரிப்போர்ட்

விஜயகாந்தின் காய் நகர்த்தல் பிரமாதம், நிறைய இடங்களின் பாதிப்புக்கு இதுவும் ஒரு காரனம்

மக்கள் ரெண்டு கட்சி தவிர்த்து மூன்றாவதை எதிர்ப்பார்க்கிரார்கள்

அத்திரி said...

உண்மையிலே நல்ல வளர்ச்சிதான்........ பாக்கலாம்

வால்பையன் said...

நல்ல முன்னேற்றம் தான்!

Admin said...

பதிவுகள் அருமை தொடருங்கள்...

ஊர்சுற்றி said...

நட்புடன் ஜமால், அக்னி பார்வை, அனானி, அபுஅஃப்ஸர், அத்ரி, வால்பையன், சந்ரு மற்றும் வா(வ)ரம் - உங்கள் அனைவருக்கும் நன்றி. தங்களுக்கு உடனடியாக பதிலிருக்க முடியாமைக்கு வருந்துறேன். அக்காவுடைய திருமணத்திற்காக ஊருக்குச் சென்றிருந்ததால் வலைப்பக்கம் வரஇயலவில்லை.